Monday, December 29, 2014

ஏர் ஆசியா QZ 8501

ஏர் ஆசியா QZ 8501

எனதருமை சகோதர சகோதரிகளே இந்த விபத்து மிகவும் கோரமானது, தொடர்ந்து மலேசிய விமானங்கள் தொலைந்து போகிறது/தாக்குதலுக்கு உள்ளாகிறது இவை அனைத்தும் இறையின் நாட்டமே 

நாம் எல்லாம் வல்ல அகிலத்தின் படைப்பாளியை இன்னும் நம்பவில்லை நம்பி இருந்தால் மேற்கண்ட வார்த்தைகள் நமது வாயில் இருந்து வராது . 

மலேசியன் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஆசியா பயணம் தவிர்க்க படவேண்டும்.

இது வரை 12 ஆண்டுகள் ஏர் ஆசியா விமானம் விபத்துக்கு உள்ளாகவில்லை இவ்வாறு நாம் பேசிகொண்டிருப்பின்  நம்மை விட நம்பிக்கை அற்றவர் வேறு யாரும் கிடையாது.

பாதுகாப்பு குறைபாடு ஏதேனும் இருப்பின் நாம் அதனை புறகணிப்பு செய்யலாம். 

ஒரு மோசமான விமான சேவை கிஸ் ஏர் அதனில் இரு முறை பயணம் செய்து பாதுகாப்பாக வந்து சேர்ந்தேனே இறைவன் அருளால்.

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சகோதர சகோதரிகள் பயணத்திற்கு முன்னும் பலருக்கு பயணம் சொல்லும் பொழுதும் இன் ஷா அல்லாஹ் என்று சொல்ல மறவாதீர். 

நாம் தினமும் பல விடயங்களில் தொடர்ந்து பயன் படுத்த வேண்டிய வார்த்தை நாளை மற்றும் பல ஒத்திவைப்புகளில் இன் ஷா அல்லாஹ் சொல்ல மறக்க வேண்டாம்.

அவனின் அனுமதியின்றி ஒரு அணுவும் அசையாது. எம் பெருமானார் ரசூல் (ஸல்) அவர்கள் இந்த வார்த்தை பிரயோகத்தை ஒரு சூழ்நிலையில் மறந்த பொழுது அவர்களையும் ஏக இறைவன் சோதித்ததை சொல்லி கொடுத்த மார்க்கம்   

இறைவன் நாட்டபடி என்கிற வார்த்தையை மறந்து விடவேண்டாம் எந்த சூழலிலும்.

இன் ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரையும் உலக மக்கள் அனைவரையும் கொடிய விபத்துகளில் இருந்து பாதுகாப்பானாக .

இந்த சம்பவத்தில் இறந்த அனைத்து மக்களின் குடும்பத்தினற்கு இந்த வேதனையை தாங்கி கொள்ளகூடிய மனவேதனையையும் அழுததையும் லேசாக்கி அருள் புரிவானாக.

பீடை , சரி இல்லாத வருடம் , ராசி இல்லை , அதிக விபத்து , மற்றும் தேவை இல்லாத பல சொற்களையும் பதிவுகளையும் தவிர்த்து விடுங்கள் யாரின் வேதனையும் நம்மை சந்தோசபடுத்தாது.

நம் அனைவரின் மீது கடமை இறந்த மக்களுக்கு பிரார்த்தனை ஒன்றே . 

மனிதநேயம் வளர்ப்போம் . மனிதம் காப்போம்  
http://gulfnews.com/news/world/other-world/family-of-10-we-missed-doomed-airasia-flight-qz8501-1.1433342

Sunday, December 28, 2014

வாகன விபத்து அனுபவம் துபாயில்

அந்த வாகன விபத்து நடந்தது 2007 துபாயில் இரவு நேரம் ...   
துபாய் பெஸ்டிவல் சிட்டி சென்று விட்டு குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தோம் அந்த  சாலை வேகம் 80 கீமீ வேகம் செல்ல உகந்தது.
நாங்கள் கடந்து சென்று  வேகம் 90 கீமீ . 
திடீரென்று ஆரஞ்சு சிக்னல் மாறுகிறது நான் கடந்து விடலாம் என்று வண்டியின் வேகத்தை கூட்டுகிறேன்.
அதே நேரத்தில் இடது புறத்தில் இருந்து வேகமாக ஒரு டயோட்டா கோரோள்ளா, எனது வண்டி நேராக சென்று அந்த வண்டியின் பக்கவாட்டில் மோதி மோசமான விபத்து. 
பிரேக் வேகமாக பிரயோகம் செய்தது பலன் இல்லை. தவறு என் மீது.
மிகவும் மோசமான விபத்து நாங்கள் 6 பேர் நிசான் டிடா கார்  நான், மனைவி, 2 மகன்கள், மருமகள் மற்றும் மாமா மகள் எதிர் வண்டியில் 2 பேர். 
விபத்தில் பாதிக்கப்பட்டோர் எங்களது வண்டியில் அனைவருக்கும் உள் காயம் மாமன் மகளுக்கு முக்குகண்ணாடியின் காது பகுதி நெற்றியில் குத்தி காயம்.
விபத்து நடந்த சமயம் ஒரு உள்ளூர் வாசி (எமராடி) தனது வண்டியை ஒரு பக்கம் பார்க் செய்து விட்டு அங்கே உள்ள சூழ்நிலையை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
எனது மனைவியை வண்டியில் இருந்து வெளியில் வர உதவினார் பின்னர் என்னை அசுவாசபடுத்தினார் ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும் கவலையை விடுங்கள் என்றார்.
அனைவரின் நலம் விசாரித்தார் வேறு ஏதும் காயங்கள் உள்ளனவா என்றும் கரிசனம் கொண்டு விசாரித்தார்.
மனித நேயத்தின் நேரடி உருவம் அவரின் அந்த அக்கறை அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருந்தது உள்ளூர் வாசி என்பதால் எதனை பற்றியும் பயம் கொள்ளவில்லை. 
போலீஸ் வரும் வரை நின்று அங்கே உள்ள சூழ்நிலையை தனது கட்டுக்குள் கொண்டு வந்த நேர்த்தி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு என்னிடம் கூறி விடைபெற்றது பாராட்டுக்குரியது.
அங்கே இருந்த பதட்டத்தில் அவரின் பெயர் மற்றும் அலைபேசி எண் கேட்க மறந்துவிட்டேன். வாழ்கையில் மறக்கமுடியாத நபரில் அவரும் ஒருவர்.
எதிர் காரில் ஒருவருக்கு ரிப் பிராக்சர் இன்னொருவர் பதட்டத்தில் நாக்கை கடித்து பல தையல்கள். 
அந்த காரோட்டிய மலையாள சகோதரர் என் மீது பிராது கொடுக்கவில்லை. சாலையில் இது எல்லாருக்கும் உண்டு சிறிது கவனக்குறைவு தவிர்த்திருக்கலாம் என வாதம்.
அவர் பிராது கொடுத்து இருந்தால்  50000 திர்ஹதுக்கு  மேல்  எனது ஒரு வருட உழைப்பு அவருக்கு உரித்தாகி இருக்கும்.
அவரின் பெரிய மனதும் பாராட்டுக்குரியது. 
நாங்கள் அந்த இரவு மருத்துவமனையில் இருந்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்கு சென்றோம்.
வெளியில் இருக்க ஜாமீன் எனது மச்சினனின் கடவுச்சீட்டு போலீஸ் பாதுகாப்பில் வழக்கு முடியும் வரை.
பின்னர் வழக்கு நடந்து அபராதம் மற்றும் எனது ஓட்டுனர் உரிமம் தற்காலிக தடை ஆகியவற்றுடன் ஒருவாராக முடிந்தது .
அந்த வழக்கில் எனக்கு suspended sentence 1 மாதம் சிறைவாசம் மூன்று வருடத்திற்கு.
அதாவது மூன்று வருடத்திற்குள் மற்றுமோர் பெரிய விபத்து என்னால் நடக்குமாயின் அந்த வழக்கின் தண்டனையுடன் இதுவும் சேர்க்கப்படும்.
அல்லாஹ்வின் கிருபையால் அது முடிந்து கடந்துவிட்டது.
விபத்தில் எனது கார் (கம்பெனி கார்) Total Loss Airbag Opened அது ஒன்றே எனது உயிரை காப்பற்றியது. 
Seat belt மற்றும் Airbag உங்கள் உயிர் காக்கும் பாதிப்பை குறைக்கும் எனது அனுபவம்.
எனது வண்டியை விட டயோட்டா கோரோள்ளா பாதிப்பு அதிகம் நாம் எங்கே மோதுகிறோம் என்பதை பொறுத்தே பாதிப்பு இருக்கும் . 
சில வண்டி அதிக பளு என்று கருத்து கொள்ளும் சகோதரர்களுக்கு.
பிரேகிங் spot வைத்து ஒரு ஸ்டிக் சிறிய சக்கரத்துடன் ஒட்டி பார்த்து நான் சென்ற வேகத்தை கணக்கிட்டனர்.
போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டு என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர் எனக்கு எந்த வித வெளி காயமும் இல்லாததால். 
என்னுடன் ஒரு மருத்துவ உதவியாளர் இருந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சேவை அனைத்தும் இலவசம் அரசாங்கத்தால்.   
இங்கே நம்மை குற்றவாளியாக பார்ப்பதில்லை மிகவும் நட்புடன் நடத்துகின்றனர் .
வழக்கு முடிந்து சில மாதங்கள் கழித்து போலீஸ் நிலையம் அழைத்தனர் வண்டியில் இருந்த பொருட்களை ஒப்படைத்தனர். 
என்னை மறுபடியும் பின் தொடர்ந்து பெயர் பிரச்சனை அதனை விளக்கி  விட்டு வெளியே வந்தது தனி கதை.

Saturday, December 27, 2014

தன்னம்பிக்கை

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அவசர உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கிய தேவை தன்னம்பிக்கை. மனிதன் அவசர கதியில் இயங்குகிறான். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோள் அறம் சார்ந்த செயல்கள் குறைந்துவிட்டன. பொருளாதாரம் ஈட்ட என்ன வேண்டுமென்றாலும் செய்ய துணிகின்றான். நாளை நமக்கு யாரும் நிரந்தரம் இல்லை இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை முக்கிய தேவையாகிறது.                       
இன்றைய காலகட்டம் அதிக  போட்டி நிறைந்த களம் மக்கள் மிகவும் மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு இந்த சூழலில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. தற்கொலைகள் மிகவும் அதிகம் மனஅழுத்தம் ஒன்றே முக்கிய காரணி . தனிமையை தவிருங்கள் துரோகங்களை மன்னியுங்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமானது அதனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி கொள்ளவேண்டாம். உங்களது வெளிகளை அதிகரித்து கொள்ளுங்கள் பகிருங்கள் (Sharing is Sexy). நண்பர் வட்டங்களை அதிகரித்து கொள்ளுங்கள் மன அழுத்தத்தினை பகிருங்கள் ஒவ்வொருவர் கண்ணோட்டம் மாறுபடும். கலந்து ஆலோசியுங்கள் உங்கள் கருத்தினில் மட்டுமே ஒற்றைக்காலில் நிற்காதீர்கள் . 

தோல்விகளே வெற்றிக்கு முதற்படி அதனை கண்டு துவளாதீர்கள் உங்களுக்கு இன்னொரு வழி உண்டு . உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு உணவு அளிப்பான் இதனில் தீர்க்கமான நம்பிக்கை வையுங்கள் முயற்சியோடு இருங்கள் . முயற்சி திருவினையாக்கும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . வாய்ப்புகள் பல வகைப்படும் நீங்கள் உங்கள் தேடுதலில் குறியாக இருங்கள் வானம் வசப்படும் . எதனை கண்டும் அஞ்சாதீர் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் உங்களை மெருகேற்றி மேன்மைபடுகிரீர் இதனில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம். 


Thursday, December 18, 2014

மனதை பாதித்த பாகிஸ்தான் துணை தூதரக கூட்டம் - பெஷாவர் சம்பவம்

மனதை பாதித்த சம்பவம் - பாகிஸ்தான் துணை தூதரகம் துபாய்

இன்று பெஷாவர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஏற்பாடு பாகிஸ்தான் துணை தூதரகத்தில் எனது மனதினை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று இதனை அவர்கள் (Peaceful candle light vigil) என்று அழைக்கின்றனர் கொடி கம்பம் மற்றும் ஒரு மேஜை இருந்தது கொடி கம்பதை சுற்றி கீழே திண்டு அடுக்காக அதனை சிலர் சுரண்டிக்கொண்டு இருந்தனர் . அவ்வளவு மெழுகுவர்த்தி மெழுகு கொட்டி இருந்தது. வேதனையான விஷயம் நமது சகோதரர்கள் ஒரு சமூகமாக வாழ எண்ணி நம்மோடு இணையாமல் பிரிந்து தனி நாடு அமைத்தனர் . ஆனால் அங்கு நடக்கும் தீவீரவாதத்தின் வீரியம் அந்த மெழுகில் தெரிந்தது . நிச்சயம் வருடத்திற்கு பல Peaceful candlelight vigil நடப்பதற்கு சாட்சியாக அந்த மெழுகு சுரண்டும்  சம்பவம் எனது மனதினை தைத்தது. எங்கள் இறைவா சிலரின் நாற்காலி பசிக்கு அப்பாவி மக்கள் பலி. வேதனை தரும் உண்மை. இன்று அவர்கள் வெளிநாட்டில் அதிகம் பிரிந்து வசிக்கின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பல நாடுகளில் குடியுரிமை பெற்றும் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வில் மற்றும் உலக மக்கள் வாழ்வில் தீவீரவாதம் என்னும் கரும்புள்ளியை நீக்கிடு, அருள் செய் எல்லாம் வல்ல நாயனே நீயே இதனை முறையிட எல்லாம் வல்லவன் . அவரவர் அவர்களின் மண்ணின் வாசனையோடு முகர்ந்து வாழ வழி செய் எங்கள் இறைவா ஆமீன் .

பெஷாவர் சம்பவம் 16/12/2014 - இரங்கல் கூட்டம் பாகிஸ்தான் துணை தூதரகம் துபாய்

இன்று ஒரு நண்பரிடம் இருந்து அழைப்பு  பாகிஸ்தான் துணை தூதரகதில் இன்று பெஷாவர் படுகொலையில்  இறந்தவர்களின் குடும்பத்திற்கு மன அமைதி மற்றும் ஒற்றுமை வேண்டி ஒரு இரங்கல் கூட்டம்  நடைபெறுகிறது முடிந்தால் கலந்து கொள்ளவும் என்று சொல்லியிருந்தார் . நம்மால் அந்த இழப்பை ஈடு செய்ய இயாலாது ஆயினும் நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எனது மனதில் ஒரு எண்ணம். நம்மால் அத்தனை குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல இயலாது. மனது சென்று வரலாம் என்று தூண்டியதால் சென்றேன் அங்கே படங்கள் வைக்கபட்டிருந்தது. அதனை கண்டு நெஞ்சு கசிந்து உருகியது கண்களில் கண்ணீர் . எங்கள் இறைவா அந்த வேதனையை தாங்கி கொள்ள கூடிய சக்தியை , மன வலிமையை அந்த குடும்பத்தாருக்கு கொடுத்திடு. இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுவர்கள் பள்ளி செல்ல மனவலிமை வேண்டும் அதனை அவர்களுக்கு கொடுத்திடு . தீவீரவாதம் வேரோடு ஒழிக்கப்பட  வேண்டும் . உலக மக்கள் நிம்மதியாக வாழ அருள் புரிவாய் .ஆமீன் 

Monday, December 15, 2014

Yuvan Shankar Raja aka Abdul Khaliq

Dear So called educated younger generation of keelakarai please refrain from posting any comments about Mr. Yuvan aka Mohammed Khaliq.
The parents of bride have greater responsibility than you and me fellow citizens of Keelakarai.
This is really a painful scenario to see posts left right and center which is the matter of their privacy .
Islam is above caste, creed and we Muslims can't be a bad example.
Did any one of you try to be of meager help to the bride family .No one was bothered which includes even me then why?
Of course most of us are not a Ummah as desired by Rasool (Sal)
You people just post,share and rejoice pictures of celebrities converting to Islam where as this is reality when it comes to your next door or kith and kin.
Allah kareem he knows better whom to pardon and who is right and wrong and none of us have the right to judge.
Just because we bear a muslim name since our birth no one is superior where as fact being people who embraced are more practicing than us.
You and me fellow citizens cannot decide on who is practicising or be sure of Jannathul firdhouse.
May Almighty allah shower his Mercy,Blessings and Longevity for the to be married couple.
Some of you might be offended but let us live and let others live with joy after all it is a small world .
Jazakallah Khayran

நண்பன் - சதீஷ்

சதீஷ் சங்கர் எனது கல்லூரி தோழன் எனது தந்தையாலும் நேசிக்கபட்டவன். முன்னேற்றத்துக்கு ஒரு எடுத்துகாட்டு ஏனோ தற்கொலை செய்து கொண்டான் சில வருடத்திற்கு முன்பு . கல்லூரி விட்டு வரும் பொழுது தினமும் சேர்ந்தே வருவோம். பல நாட்களில் பவள விழா கட்டிடம் பின்பு உள்ள நூடுல்ஸ் கடையில் ருசி பார்க்காமல் கிளம்பியதில்லை. இன்று அவனை பற்றி ஒரு நினைவு . சாதி, மதம், மொழி பார்த்து வருவதில்லை நட்பு .‪#‎RIPSatheesh‬ உனது பிரிவு எனக்கு பெரிய இழப்பு.

Saturday, December 13, 2014

சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வு - முதீனா துபாய்


ஒரு வார கடைசி வெள்ளி கிழமை இரவு நண்பர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு வரலாம் என்று முதீனா பக்கம் சென்றேன் . சிறிது நேரத்தில் அங்கே தேனீர் அருந்திவிட்டு பின்னர் இன்னொரு நண்பரை பார்க்க செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பால்ய நண்பர் என்னுடன் பேசி கொண்டிருந்தார் 50 வயதிருக்கும் நாங்கள் இருவரும் ஒரே ஊரை சார்ந்தவர்கள் . சிறிது நேரத்தில் அவர் என்னிடம் தம்பி தலை சுற்றுவது போல் உள்ளது ஒரு இருக்கை தாருங்கள் என்று சொன்னார் . மேலும் தனக்கு இதற்கு முன் இது போல் நடந்ததில்லை என்றும் கூறினார். அவர் அடுத்த தினம் ஊருக்கு செல்ல வேறு திட்டமிட்டு இருந்தார். அவர் அமர பக்கத்தில் இருந்த தேனீர் விடுதியில் இருக்கை ஒன்றை கொண்டு வந்து அவரை அமர செய்து  சற்று தண்ணீரில் அவரது முகத்தை கழுவி சிறிது ஓய்வார இருக்க செய்தோம். பின்னர் பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்து நான் எனது கார் எடுத்து வருகிறேன் உங்களை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி விட்டு செல்லும் வழியில் அவரது உறவினர் ஒருவரை கண்டு சொல்லிவிட்டு எனது காரில் அவரை கொண்டு சென்று அவரது வீட்டில் விட்டேன் . பின்னர் ஊருக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசித்த பொழுது அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதாகவும் அதற்கு உரிய மருந்தினை பரிந்துரை செய்ததாகவும் தெரிந்து கொண்டேன். 

வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்கள் தங்களது உடல் நலம் மீதும் கருத்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு விலகி இருப்பதினால் உணவு கட்டுப்பாடு இல்லை. உங்களை பராமரித்து பேணி காத்து கொள்ளவேண்டியது உங்களின் கடமை . சுய மருத்துவம் எடுப்பதை சற்று குறைத்து உங்கள்  நலம் பேணுங்கள்  நண்பர்களே . 


மிராக்கில் கார்டன் துபாய்


சென்ற வாரம் மிராக்கில் கார்டனில் நடந்த சம்பவம்

ஓர் சிறுவன் பெயர் சொல்ல தெரியவில்லை அவனது பெற்றோர் அவனை தொலைத்து விட்டனர் .

அழுது கொண்டே சுற்றி கொண்டிருந்தான் மாமா மற்றும் பாப்பா மட்டுமே பெயர் சொல்ல தெரியவில்லை .

நாங்கள் குடும்பத்துடன் சென்று இருந்தோம் ஏனோ அந்த சிறுவன் எங்களிடம் ஒட்டி கொண்டான் ஆனால் அழுகை நின்ற பாடில்லை.

நாங்களும் அவனை தூக்கி கொண்டு சுற்றினோம் செக்யூரிட்டி இடம் விவரம் அறிவித்தோம்  பின்னர் அறிவிப்பு செய்தனர் அந்த சிறுவன் அவர்களிடத்தில் செல்ல மறுத்து விட்டான் .

என்னிடம் மற்றும் எனது மனைவியிடம் மட்டுமே ஒட்டி கொண்டான் நாங்கள் செக்யூரிட்டி இடம் எனது  அலைபேசி எண் கொடுத்து விட்டு நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் தகவல் தந்தால் கூட்டி கொண்டு வருகிறோம் என்று கூறி விடைபெற்றோம் .

சிறிது நேரத்திற்கு பிறகு கேட் 1க்கு தகவல் கிடைத்ததாகவும் அவனது பெற்றோர் வருகின்றனர் நீங்கள் அங்கே வாருங்கள் என்று அலைபேசியில் தெரிவித்தனர் .

நாங்கள் அங்கே சென்றோம் அவனது தாயை கண்டவுடன் அவன் பாய்ந்து சென்றான் . அவனை அந்த தாய் தேற்றினார் அழுகை நின்றபாடில்லை . நன்றியும் தெரிவித்தார் .

நாங்கள் ஒப்படைத்து விட்டு கடமை நிறைவுபெற்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றோம்.

அந்த சிறுவன் நமது அண்டை நாடு பாகிஸ்தானை சேர்ந்தவன் நாங்கள் அவனது தாயுடன் உறவாடியது உருது .

அரசியல் மற்றும்  பிரிவினைக்கு மட்டுமே அவர்களை தூற்றும் அரசியல்வாதிகளே அந்த சிறுவன் இந்த இந்திய குடும்பத்திடம் தான் பாதுகாப்பை உணர்ந்தான் .

அல் ஹம்துலில்லாஹ்!