சென்ற வாரம் மிராக்கில் கார்டனில் நடந்த சம்பவம்
ஓர் சிறுவன் பெயர் சொல்ல தெரியவில்லை அவனது பெற்றோர் அவனை தொலைத்து விட்டனர் .
அழுது கொண்டே சுற்றி கொண்டிருந்தான் மாமா மற்றும் பாப்பா மட்டுமே பெயர் சொல்ல தெரியவில்லை .
நாங்கள் குடும்பத்துடன் சென்று இருந்தோம் ஏனோ அந்த சிறுவன் எங்களிடம் ஒட்டி கொண்டான் ஆனால் அழுகை நின்ற பாடில்லை.
நாங்களும் அவனை தூக்கி கொண்டு சுற்றினோம் செக்யூரிட்டி இடம் விவரம் அறிவித்தோம் பின்னர் அறிவிப்பு செய்தனர் அந்த சிறுவன் அவர்களிடத்தில் செல்ல மறுத்து விட்டான் .
என்னிடம் மற்றும் எனது மனைவியிடம் மட்டுமே ஒட்டி கொண்டான் நாங்கள் செக்யூரிட்டி இடம் எனது அலைபேசி எண் கொடுத்து விட்டு நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் தகவல் தந்தால் கூட்டி கொண்டு வருகிறோம் என்று கூறி விடைபெற்றோம் .
சிறிது நேரத்திற்கு பிறகு கேட் 1க்கு தகவல் கிடைத்ததாகவும் அவனது பெற்றோர் வருகின்றனர் நீங்கள் அங்கே வாருங்கள் என்று அலைபேசியில் தெரிவித்தனர் .
நாங்கள் அங்கே சென்றோம் அவனது தாயை கண்டவுடன் அவன் பாய்ந்து சென்றான் . அவனை அந்த தாய் தேற்றினார் அழுகை நின்றபாடில்லை . நன்றியும் தெரிவித்தார் .
நாங்கள் ஒப்படைத்து விட்டு கடமை நிறைவுபெற்ற மகிழ்ச்சியில் அங்கிருந்து சென்றோம்.
அந்த சிறுவன் நமது அண்டை நாடு பாகிஸ்தானை சேர்ந்தவன் நாங்கள் அவனது தாயுடன் உறவாடியது உருது .
அரசியல் மற்றும் பிரிவினைக்கு மட்டுமே அவர்களை தூற்றும் அரசியல்வாதிகளே அந்த சிறுவன் இந்த இந்திய குடும்பத்திடம் தான் பாதுகாப்பை உணர்ந்தான் .
அல் ஹம்துலில்லாஹ்!
No comments:
Post a Comment