மனதை பாதித்த சம்பவம் - பாகிஸ்தான் துணை தூதரகம் துபாய்
இன்று பெஷாவர் சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்து கூட்டம் ஏற்பாடு பாகிஸ்தான் துணை தூதரகத்தில் எனது மனதினை மிகவும் பாதித்த சம்பவம் ஒன்று இதனை அவர்கள் (Peaceful candle light vigil) என்று அழைக்கின்றனர் கொடி கம்பம் மற்றும் ஒரு மேஜை இருந்தது கொடி கம்பதை சுற்றி கீழே திண்டு அடுக்காக அதனை சிலர் சுரண்டிக்கொண்டு இருந்தனர் . அவ்வளவு மெழுகுவர்த்தி மெழுகு கொட்டி இருந்தது. வேதனையான விஷயம் நமது சகோதரர்கள் ஒரு சமூகமாக வாழ எண்ணி நம்மோடு இணையாமல் பிரிந்து தனி நாடு அமைத்தனர் . ஆனால் அங்கு நடக்கும் தீவீரவாதத்தின் வீரியம் அந்த மெழுகில் தெரிந்தது . நிச்சயம் வருடத்திற்கு பல Peaceful candlelight vigil நடப்பதற்கு சாட்சியாக அந்த மெழுகு சுரண்டும் சம்பவம் எனது மனதினை தைத்தது. எங்கள் இறைவா சிலரின் நாற்காலி பசிக்கு அப்பாவி மக்கள் பலி. வேதனை தரும் உண்மை. இன்று அவர்கள் வெளிநாட்டில் அதிகம் பிரிந்து வசிக்கின்றனர். அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பல நாடுகளில் குடியுரிமை பெற்றும் வாழ்கின்றனர். அவர்கள் வாழ்வில் மற்றும் உலக மக்கள் வாழ்வில் தீவீரவாதம் என்னும் கரும்புள்ளியை நீக்கிடு, அருள் செய் எல்லாம் வல்ல நாயனே நீயே இதனை முறையிட எல்லாம் வல்லவன் . அவரவர் அவர்களின் மண்ணின் வாசனையோடு முகர்ந்து வாழ வழி செய் எங்கள் இறைவா ஆமீன் .
No comments:
Post a Comment