இன்று ஒரு நண்பரிடம் இருந்து அழைப்பு பாகிஸ்தான் துணை தூதரகதில் இன்று பெஷாவர் படுகொலையில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு மன அமைதி மற்றும் ஒற்றுமை வேண்டி ஒரு இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது முடிந்தால் கலந்து கொள்ளவும் என்று சொல்லியிருந்தார் . நம்மால் அந்த இழப்பை ஈடு செய்ய இயாலாது ஆயினும் நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று எனது மனதில் ஒரு எண்ணம். நம்மால் அத்தனை குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல இயலாது. மனது சென்று வரலாம் என்று தூண்டியதால் சென்றேன் அங்கே படங்கள் வைக்கபட்டிருந்தது. அதனை கண்டு நெஞ்சு கசிந்து உருகியது கண்களில் கண்ணீர் . எங்கள் இறைவா அந்த வேதனையை தாங்கி கொள்ள கூடிய சக்தியை , மன வலிமையை அந்த குடும்பத்தாருக்கு கொடுத்திடு. இந்த சம்பவத்திற்கு பிறகு சிறுவர்கள் பள்ளி செல்ல மனவலிமை வேண்டும் அதனை அவர்களுக்கு கொடுத்திடு . தீவீரவாதம் வேரோடு ஒழிக்கப்பட வேண்டும் . உலக மக்கள் நிம்மதியாக வாழ அருள் புரிவாய் .ஆமீன்
No comments:
Post a Comment