இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் அவசர உலகில் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் முக்கிய தேவை தன்னம்பிக்கை. மனிதன் அவசர கதியில் இயங்குகிறான். பொருளாதாரம் மட்டுமே குறிக்கோள் அறம் சார்ந்த செயல்கள் குறைந்துவிட்டன. பொருளாதாரம் ஈட்ட என்ன வேண்டுமென்றாலும் செய்ய துணிகின்றான். நாளை நமக்கு யாரும் நிரந்தரம் இல்லை இந்த காலகட்டத்தில் தன்னம்பிக்கை முக்கிய தேவையாகிறது.
இன்றைய காலகட்டம் அதிக போட்டி நிறைந்த களம் மக்கள் மிகவும் மனஅழுத்தத்துடன் வாழ்கின்றனர் வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு இந்த சூழலில் தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. தற்கொலைகள் மிகவும் அதிகம் மனஅழுத்தம் ஒன்றே முக்கிய காரணி . தனிமையை தவிருங்கள் துரோகங்களை மன்னியுங்கள் வாழ்க்கை மிகவும் அற்புதமானது அதனை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்கி கொள்ளவேண்டாம். உங்களது வெளிகளை அதிகரித்து கொள்ளுங்கள் பகிருங்கள் (Sharing is Sexy). நண்பர் வட்டங்களை அதிகரித்து கொள்ளுங்கள் மன அழுத்தத்தினை பகிருங்கள் ஒவ்வொருவர் கண்ணோட்டம் மாறுபடும். கலந்து ஆலோசியுங்கள் உங்கள் கருத்தினில் மட்டுமே ஒற்றைக்காலில் நிற்காதீர்கள் .
தோல்விகளே வெற்றிக்கு முதற்படி அதனை கண்டு துவளாதீர்கள் உங்களுக்கு இன்னொரு வழி உண்டு . உங்களை படைத்த இறைவன் உங்களுக்கு உணவு அளிப்பான் இதனில் தீர்க்கமான நம்பிக்கை வையுங்கள் முயற்சியோடு இருங்கள் . முயற்சி திருவினையாக்கும் இதில் எந்த சந்தேகமும் வேண்டாம் . வாய்ப்புகள் பல வகைப்படும் நீங்கள் உங்கள் தேடுதலில் குறியாக இருங்கள் வானம் வசப்படும் . எதனை கண்டும் அஞ்சாதீர் வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் உங்களை மெருகேற்றி மேன்மைபடுகிரீர் இதனில் உங்களுக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்.
No comments:
Post a Comment