ஒரு வார கடைசி வெள்ளி கிழமை இரவு நண்பர்களிடம் சற்று நேரம் பேசிவிட்டு வரலாம் என்று முதீனா பக்கம் சென்றேன் . சிறிது நேரத்தில் அங்கே தேனீர் அருந்திவிட்டு பின்னர் இன்னொரு நண்பரை பார்க்க செல்லவேண்டும் என்ற எண்ணத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்பொழுது ஒரு பால்ய நண்பர் என்னுடன் பேசி கொண்டிருந்தார் 50 வயதிருக்கும் நாங்கள் இருவரும் ஒரே ஊரை சார்ந்தவர்கள் . சிறிது நேரத்தில் அவர் என்னிடம் தம்பி தலை சுற்றுவது போல் உள்ளது ஒரு இருக்கை தாருங்கள் என்று சொன்னார் . மேலும் தனக்கு இதற்கு முன் இது போல் நடந்ததில்லை என்றும் கூறினார். அவர் அடுத்த தினம் ஊருக்கு செல்ல வேறு திட்டமிட்டு இருந்தார். அவர் அமர பக்கத்தில் இருந்த தேனீர் விடுதியில் இருக்கை ஒன்றை கொண்டு வந்து அவரை அமர செய்து சற்று தண்ணீரில் அவரது முகத்தை கழுவி சிறிது ஓய்வார இருக்க செய்தோம். பின்னர் பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவரிடம் அவரை ஒப்படைத்து நான் எனது கார் எடுத்து வருகிறேன் உங்களை உங்கள் வீட்டில் விட்டு விடுகிறேன் என்று கூறி விட்டு செல்லும் வழியில் அவரது உறவினர் ஒருவரை கண்டு சொல்லிவிட்டு எனது காரில் அவரை கொண்டு சென்று அவரது வீட்டில் விட்டேன் . பின்னர் ஊருக்கு சென்று மருத்துவரிடம் ஆலோசித்த பொழுது அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதாகவும் அதற்கு உரிய மருந்தினை பரிந்துரை செய்ததாகவும் தெரிந்து கொண்டேன்.
வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்கள் தங்களது உடல் நலம் மீதும் கருத்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் குடும்பத்தினரை விட்டு விலகி இருப்பதினால் உணவு கட்டுப்பாடு இல்லை. உங்களை பராமரித்து பேணி காத்து கொள்ளவேண்டியது உங்களின் கடமை . சுய மருத்துவம் எடுப்பதை சற்று குறைத்து உங்கள் நலம் பேணுங்கள் நண்பர்களே .
No comments:
Post a Comment