Sunday, December 28, 2014

வாகன விபத்து அனுபவம் துபாயில்

அந்த வாகன விபத்து நடந்தது 2007 துபாயில் இரவு நேரம் ...   
துபாய் பெஸ்டிவல் சிட்டி சென்று விட்டு குடும்பத்துடன் வந்து கொண்டிருந்தோம் அந்த  சாலை வேகம் 80 கீமீ வேகம் செல்ல உகந்தது.
நாங்கள் கடந்து சென்று  வேகம் 90 கீமீ . 
திடீரென்று ஆரஞ்சு சிக்னல் மாறுகிறது நான் கடந்து விடலாம் என்று வண்டியின் வேகத்தை கூட்டுகிறேன்.
அதே நேரத்தில் இடது புறத்தில் இருந்து வேகமாக ஒரு டயோட்டா கோரோள்ளா, எனது வண்டி நேராக சென்று அந்த வண்டியின் பக்கவாட்டில் மோதி மோசமான விபத்து. 
பிரேக் வேகமாக பிரயோகம் செய்தது பலன் இல்லை. தவறு என் மீது.
மிகவும் மோசமான விபத்து நாங்கள் 6 பேர் நிசான் டிடா கார்  நான், மனைவி, 2 மகன்கள், மருமகள் மற்றும் மாமா மகள் எதிர் வண்டியில் 2 பேர். 
விபத்தில் பாதிக்கப்பட்டோர் எங்களது வண்டியில் அனைவருக்கும் உள் காயம் மாமன் மகளுக்கு முக்குகண்ணாடியின் காது பகுதி நெற்றியில் குத்தி காயம்.
விபத்து நடந்த சமயம் ஒரு உள்ளூர் வாசி (எமராடி) தனது வண்டியை ஒரு பக்கம் பார்க் செய்து விட்டு அங்கே உள்ள சூழ்நிலையை தனது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
எனது மனைவியை வண்டியில் இருந்து வெளியில் வர உதவினார் பின்னர் என்னை அசுவாசபடுத்தினார் ஒன்றும் இல்லை எல்லாம் சரியாகிவிடும் கவலையை விடுங்கள் என்றார்.
அனைவரின் நலம் விசாரித்தார் வேறு ஏதும் காயங்கள் உள்ளனவா என்றும் கரிசனம் கொண்டு விசாரித்தார்.
மனித நேயத்தின் நேரடி உருவம் அவரின் அந்த அக்கறை அந்த நேரத்தில் மிகவும் தேவையாக இருந்தது உள்ளூர் வாசி என்பதால் எதனை பற்றியும் பயம் கொள்ளவில்லை. 
போலீஸ் வரும் வரை நின்று அங்கே உள்ள சூழ்நிலையை தனது கட்டுக்குள் கொண்டு வந்த நேர்த்தி அவர்களிடம் ஒப்படைத்து விட்டு என்னிடம் கூறி விடைபெற்றது பாராட்டுக்குரியது.
அங்கே இருந்த பதட்டத்தில் அவரின் பெயர் மற்றும் அலைபேசி எண் கேட்க மறந்துவிட்டேன். வாழ்கையில் மறக்கமுடியாத நபரில் அவரும் ஒருவர்.
எதிர் காரில் ஒருவருக்கு ரிப் பிராக்சர் இன்னொருவர் பதட்டத்தில் நாக்கை கடித்து பல தையல்கள். 
அந்த காரோட்டிய மலையாள சகோதரர் என் மீது பிராது கொடுக்கவில்லை. சாலையில் இது எல்லாருக்கும் உண்டு சிறிது கவனக்குறைவு தவிர்த்திருக்கலாம் என வாதம்.
அவர் பிராது கொடுத்து இருந்தால்  50000 திர்ஹதுக்கு  மேல்  எனது ஒரு வருட உழைப்பு அவருக்கு உரித்தாகி இருக்கும்.
அவரின் பெரிய மனதும் பாராட்டுக்குரியது. 
நாங்கள் அந்த இரவு மருத்துவமனையில் இருந்து விட்டு அடுத்த நாள் வீட்டுக்கு சென்றோம்.
வெளியில் இருக்க ஜாமீன் எனது மச்சினனின் கடவுச்சீட்டு போலீஸ் பாதுகாப்பில் வழக்கு முடியும் வரை.
பின்னர் வழக்கு நடந்து அபராதம் மற்றும் எனது ஓட்டுனர் உரிமம் தற்காலிக தடை ஆகியவற்றுடன் ஒருவாராக முடிந்தது .
அந்த வழக்கில் எனக்கு suspended sentence 1 மாதம் சிறைவாசம் மூன்று வருடத்திற்கு.
அதாவது மூன்று வருடத்திற்குள் மற்றுமோர் பெரிய விபத்து என்னால் நடக்குமாயின் அந்த வழக்கின் தண்டனையுடன் இதுவும் சேர்க்கப்படும்.
அல்லாஹ்வின் கிருபையால் அது முடிந்து கடந்துவிட்டது.
விபத்தில் எனது கார் (கம்பெனி கார்) Total Loss Airbag Opened அது ஒன்றே எனது உயிரை காப்பற்றியது. 
Seat belt மற்றும் Airbag உங்கள் உயிர் காக்கும் பாதிப்பை குறைக்கும் எனது அனுபவம்.
எனது வண்டியை விட டயோட்டா கோரோள்ளா பாதிப்பு அதிகம் நாம் எங்கே மோதுகிறோம் என்பதை பொறுத்தே பாதிப்பு இருக்கும் . 
சில வண்டி அதிக பளு என்று கருத்து கொள்ளும் சகோதரர்களுக்கு.
பிரேகிங் spot வைத்து ஒரு ஸ்டிக் சிறிய சக்கரத்துடன் ஒட்டி பார்த்து நான் சென்ற வேகத்தை கணக்கிட்டனர்.
போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விட்டு என்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர் எனக்கு எந்த வித வெளி காயமும் இல்லாததால். 
என்னுடன் ஒரு மருத்துவ உதவியாளர் இருந்தார் மருத்துவமனையில் அனுமதிக்கும் வரை சேவை அனைத்தும் இலவசம் அரசாங்கத்தால்.   
இங்கே நம்மை குற்றவாளியாக பார்ப்பதில்லை மிகவும் நட்புடன் நடத்துகின்றனர் .
வழக்கு முடிந்து சில மாதங்கள் கழித்து போலீஸ் நிலையம் அழைத்தனர் வண்டியில் இருந்த பொருட்களை ஒப்படைத்தனர். 
என்னை மறுபடியும் பின் தொடர்ந்து பெயர் பிரச்சனை அதனை விளக்கி  விட்டு வெளியே வந்தது தனி கதை.

No comments:

Post a Comment