Friday, January 9, 2015

மறுமை நாள் எதற்காக?

மறுமை நாள் எதற்காக?
************************************
‘மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்.
கூறுங்கள்: ‘மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.’
மேலும் இந்த மறுமை வருவது- நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கின்றது.
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 34 ஸபஃ 3-6

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

No comments:

Post a Comment