என் சமூகத்தினரே!
*****************************
*****************************
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட உரை அது. ஃபிர்அவ்ன் என்கிற உலக மகா ஃபாசிஸ்டின் அவையில் இறைநம்பிக்கையாளர் ஒருவர் நிகழ்த்திய உரை.
அந்த அவையில் அன்று அவர் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து முழங்கிய வார்த்தைகள் இன்றும் சூடு ஆறாமல் சுவை குன்றாமல் குர்ஆனில் பதிவாகி இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால் அவருடைய உரை இடம் பெற்றுள்ள அத்தியாயத்திற்கும் அவரைக் குறிக்கின்ற விதத்தில் அல் முஃமின் (இறைநம்பிக்கையாளர்) என்றே பெயரிடப்பட்டுள்ளது.
இன்று வாசித்தாலும் மனம் கனக்கின்றது. கண்கள் கலங்குகின்றன. புதுத் தெம்பும் புத்துணர்வும் நாடி நரம்புகளிலெல்லாம் பொங்கிப் பரவுகின்றது. மகிழ்ச்சியும் உவகையும் துக்கமும் அழுகையும் ஒரு சேர வருகின்றன. இனம் புரியாத உணர்வால் மனம் நிறைகின்றது.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். குழந்தைகளைக் கொல்கின்ற கொடூர மனம் படைத்த, படை பலமும் பக்க பலமும் நிறைந்த, தன்னைத்தானே இறைவன் என்று சொல்லிக்கொள்கின்ற அளவுக்கு ஆணவமும் அகங்காரமும் திமிரும் தெனாவட்டும் நிறைந்த கொடியவனான ஃபிர்அவ்னின் அவையில் அவனுடைய துதிபாடிகளை வைத்துக்கொண்டே நிமிர்ந்த நெஞ்சும் நேரிய பார்வையுமாய் கணீர் கணீர் என்கிற குரலில் உணர்வுப் பிழம்பாய் உரை நிகழ்த்த வேண்டும் எனில் எந்த அளவுக்கு நெஞ்சுரம் இருந்திருக்க வேண்டும்? இறைவன் மீதான நம்பிக்கையும் பற்றும் அன்பும் எந்த அளவுக்கு அவருடைய உள்ளத்தில் நிறைந்திருக்க வேண்டும்?
இந்த உரையின் மையக் கருத்தாக எடுப்பாகத் தெரிவது மறுமைச் சிந்தனையும் இறைப்பற்றும்தாம்.
அதனை உணர்த்துகின்ற வாசகங்கள்தாம்:
‘என் சமூகத்தினரே!
இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்!
திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்’ (திருக்குர்ஆன் அத்தியாயம் 40 அல் முஃமின் 39)
இந்த உலக வாழ்க்கை சில நாட்கள்தாம்!
திண்ணமாக, மறுமைதான் நிலையான தங்குமிடமாகும்’ (திருக்குர்ஆன் அத்தியாயம் 40 அல் முஃமின் 39)
முழு அத்தியாயத்தையும் ஒரு முறை வாசித்துப் பாருங்களேன்....
நன்றி : சகோதரர் : டி. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
No comments:
Post a Comment