Friday, January 30, 2015

சிந்தனை

சிந்தனைகள் அதிகம் படித்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அதி உயர கட்டிடங்கள் எழுப்பபட்ட காலத்தில் லிப்டில் பயணம் செய்யும் பயணிகளின் மன அழுத்தத்தை கட்டுபடுத்தவும் அவர்களின் கவனத்தை திசை திருப்பவும் என்ன செய்யலாம் என்று ஒரு லிப்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது . பலர் பல வித கருத்துக்கள் தெரிவித்தனர் அனைத்துமே பொது மேலாளருக்கு திருப்தி அளிக்கவில்லை.
அந்த கூட்டம் முடிந்தது பொது மேலாளர் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார் அப்பொழுது அங்கு வந்த அலுவலக சிப்பந்தி அவரின் சிந்தனைக்கான காரணத்தை கேட்டறிந்தார். நான் ஒரு யோசனை சொல்லட்டுமா என்று கேட்டார் பொது மேலாளரும் சொல்லுங்கள் என்றார் ஆர்வத்துடன் ஏன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பொறுத்த கூடாது மக்கள் அனைவருமே தங்கள் அழகியலில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் தங்களை சீர் செய்து கொள்ளவும் அழகு படுத்தி கொள்ளவும் அந்த நேரத்தினை செலவிடுவார்கள் பயண நேரத்தில் உள்ள மன அழுத்தமும் இருக்காது.
பொது மேலாளர் மிகவும் சந்தோசம் அடைந்தார் இதனை அமுல்படுத்தினார் அந்த சிப்பந்தியும் கவுரவிக்கபட்டார். லிப்டில் கண்ணாடி பிறந்த கதை இதுவே.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
எந்த நிலையிலும் அதிகம் கேளுங்கள் மிகவும் பயனுள்ள கருத்துகள் / செய்திகள் / சிந்தனைகள் / ஆலோசனைகளின் பிறப்பிடம் அதுவாக இருக்கலாம்.

No comments:

Post a Comment