Friday, January 30, 2015

சிந்தனை

சிந்தனைகள் அதிகம் படித்தவர்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல. அதி உயர கட்டிடங்கள் எழுப்பபட்ட காலத்தில் லிப்டில் பயணம் செய்யும் பயணிகளின் மன அழுத்தத்தை கட்டுபடுத்தவும் அவர்களின் கவனத்தை திசை திருப்பவும் என்ன செய்யலாம் என்று ஒரு லிப்ட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது . பலர் பல வித கருத்துக்கள் தெரிவித்தனர் அனைத்துமே பொது மேலாளருக்கு திருப்தி அளிக்கவில்லை.
அந்த கூட்டம் முடிந்தது பொது மேலாளர் சிந்தனையில் ஆழ்ந்து இருந்தார் அப்பொழுது அங்கு வந்த அலுவலக சிப்பந்தி அவரின் சிந்தனைக்கான காரணத்தை கேட்டறிந்தார். நான் ஒரு யோசனை சொல்லட்டுமா என்று கேட்டார் பொது மேலாளரும் சொல்லுங்கள் என்றார் ஆர்வத்துடன் ஏன் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை பொறுத்த கூடாது மக்கள் அனைவருமே தங்கள் அழகியலில் ஆர்வம் கொண்டவர்கள் அவர்கள் தங்களை சீர் செய்து கொள்ளவும் அழகு படுத்தி கொள்ளவும் அந்த நேரத்தினை செலவிடுவார்கள் பயண நேரத்தில் உள்ள மன அழுத்தமும் இருக்காது.
பொது மேலாளர் மிகவும் சந்தோசம் அடைந்தார் இதனை அமுல்படுத்தினார் அந்த சிப்பந்தியும் கவுரவிக்கபட்டார். லிப்டில் கண்ணாடி பிறந்த கதை இதுவே.
செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
எந்த நிலையிலும் அதிகம் கேளுங்கள் மிகவும் பயனுள்ள கருத்துகள் / செய்திகள் / சிந்தனைகள் / ஆலோசனைகளின் பிறப்பிடம் அதுவாக இருக்கலாம்.

Love Thyself


Life is beautiful face any hurdle with confidence . People wish to transform to the wish of others thereby loosing what is their eternity. Be yourself always when you feel thought in you is right wait for the moment. Thyself is a reflexive pronoun which will bring in the reflex in you when you love thyself.



https://www.linkedin.com/pulse/love-thyself-sheik-mohamed-sulaiman?trk=mp-reader-card

இந்தியக் குழந்தையைக் கொத்தப் பார்க்கும் அமெரிக்க ராஜாளி

“அமெரிக்க சதிவலையில் வீழ்ந்துவிட வேண்டாம்” என குடியரசு தின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் இந்தியாவுக்கு சீனப் பத்திரிகைகள் வேண்டுகோள் விடுத்துள்ளன.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பியுள்ள குடியரசு தின வாழ்த்துச் செய்தியில், “இந்தியா – சீனா உறவு மேம்பட்டு இருநாடுகளுக்கும் இடையே அமைதி மேலோங்க வேண்டும் என சீனா விரும்புகிறது” என குறிப்பிட்டுள்ளார்.



மேலும்  படிக்க  http://www.mrpamaran.com/?p=7239

Art of listening

https://www.linkedin.com/pulse/art-listening-sheik-mohamed-sulaiman

Saturday, January 24, 2015

உச்சத்தில் நிற்கிறது ஊழல். இன்றைய சூழலில் ஊழல் எவ்வாறு நமது வாழ்வியலில் ஒரு அன்றாட அங்கமாகி விட்டதை வேதனையுடன் சித்தரிக்கும் எனது கட்டுரை mr. பாமரனில்  

http://www.mrpamaran.com/?p=7204 

Tuesday, January 20, 2015

வேலை வாய்ப்பு ஒரு மாற்று பார்வை

வேலை வாய்ப்பு ஒரு மாற்று பார்வை இன்றைய சூழலில் இந்த கட்டுரை காலத்துக்கு ஏற்றது. சில நாட்களுக்கு முன்னர் எனது மனதின் வேதனைகளை பிரதிபலித்த சில ஸ்டேடஸ்கள் இன்று கட்டுரை வடிவில். யாரையும் புண்படுத்தும் நோக்கில் இந்த கட்டுரை எழுதப்படவில்லை . இன்றைய இளைஞர்களின் சிந்தனையை பண்படுத்த மற்றும் தட்டி எழுப்பிடுவதே இந்த கட்டுரையின் நோக்கம் 

http://www.mrpamaran.com/?p=7164

Monday, January 19, 2015

Mr. Pamaran.com - எனது பதிவு - உயிர் பறிக்கும் வேகம்

இந்த சகோதரனின் எழுத்துக்கும் http://mrpamaran.comஇணையதளத்தில் மதிப்பளித்து சிறிது தேவையான மாற்றங்களுடன் பிரசுரம் செய்த சகோதரர் Ikhwan Ameer .உங்களை போன்றவர்களின் ஊக்கமே இன்றைய இளைய சமுதாயத்தின் ஆக்கம். உள்ளம் கனிந்த நன்றிகள். இறைவன் போதுமானவன் .

http://www.mrpamaran.com/?p=7149

Friday, January 9, 2015

ஐடி நிறுவனங்கள் - வேலைவாய்ப்பு தற்போதைய சூழல் - சகோதரர் விநாயக முருகன்

ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஐடி நண்பர்கள் பலரின் ஆலோசனைகளை பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் இந்த ஐடி தொழில் இல்லாவிட்டால் என்ன செய்வீங்க என்று கேட்டால் ஒருக்கணம் திகைத்து நிற்பதை பார்த்துள்ளேன். பெரும்பாலும் கல்லூரி கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேறி மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருபவர்கள் முதல் மாதம் சுளையாக இருபதாயிரம், முப்பதாயிரம் என்று வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் சாம்சங் கேலக்ஸியும், டெர்பி, லீ ஜீன்சுகளுமாய் வாங்கி குவிப்பார்கள். நடுத்தர வயதினர் இஎம்ஐக்களில் கார்,வீடு வாங்கி சம்பளத்தில் முக்கால்வாசியை கடன் கட்டிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் கடன் வாங்காமல் வீடு,கார் வாங்க முடியாது என்பது நிதர்சனம் என்றாலும் என்னைக்கேட்டால் சம்பளத்தில் இருபது சதவீதத்துக்கு குறைவாக கடன் வாங்கினால் நல்லது என்பேன். எந்த தொழில் செய்தாலும் பதினெட்டு மாதங்கள் சம்பளத்தை கையில் சேமிப்பாக வைத்திருக்கவும் என்று வாரன் பபெட் சொல்வார்..
சைக்கிளில் சென்று பேப்பர் விநியோகம் செய்தது, ஊரில் அம்மா நடத்திய இட்லிக்கடையில் வேலை, பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலை, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர், மார்கெட்டிங் ரெப், பத்திரிக்கையில் ப்ரீலான்சர் என்று பல வேலைகளை செய்தபிறகே ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவன் நான். ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும்போது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம்பளத்துடன் புதிய வேலை வரும்.மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது அந்த வேலை பிடிக்காமல் திடீரென ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்ப்பேன். நான்கைந்து ஐடி நிறுவனங்கள் மாறி அலைந்துவிட்டேன். இப்போது இருக்கும் வேலை பறிபோய் ஒரு பத்திரிக்கை வேலையோ அல்லது வேறு ஒரு தொழிலோ செய்யும் பட்சத்தில் நான் கெளரவம் பார்க்காமல் அதை செய்வேன். எனது தேவைகள் மிக குறைவு. சிக்கல்கள் அதிகம் இல்லாமல் மிக எளிமையாக வாழ பழகிவிட்டேன். பெரியளவில் கடன் இல்லை. பெரியளவில் சேமிப்பும் இல்லை. ஒரு குழந்தையோடு போதுமென்று நிறுத்திவிட்டேன். எனது உணவுபழக்கமும் மிக எளிமையானவை. இந்த விஷயத்தில் மலையாளிகளை எனக்கு பிடிக்கும். எந்த சூழலிலும் வாழ பழகியவர்களை வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாக தண்டித்து விடாது என்று உறுதியாக நம்புவன். சிக்கனத்தை, சேமிப்பை, எளிமையை கொண்டாடியவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. தவிர வேலை இழப்பு என்பது வருத்தமான விஷயம் என்றாலும் வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஆடம்பரம் மேற்கத்திய வாழ்க்கையிடமிருந்து நாம் கற்றது. போலிக்கெளரவம் நமது ரத்தத்திலேயே ஊறியது. இந்த இரண்டுமே நவீன வாழ்க்கையின் சிக்கல்கள்.

நன்றி : சகோதரர் விநாயக முருகன்

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று உயிரற்ற தொலை தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்களுக்கு - (Restore Factory settings ) மீட்டெடுக்க தொழிற்சாலை அமைப்பு.

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்
********************************************
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவிக்கின்றார்:
அண்ணல் நபிகளார்(ஸல்) என்னுடைய தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னார்: ‘இந்த உலகத்தில் ஒரு பயணியைப் போன்று அல்லது வழிப்போக்கரைப் போன்று வாழுங்கள்’
நூல் :புகாரி
ஆம். இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான அந்தஸ்து ஒரு பயணியைப் போன்றதுதான். ஏதோ இங்கேயே காலமெல்லாம் வாழப்போகின்றோம் என்கிற நினைப்புடன் அவன் இந்த உலகத்தில் வாழக்கூடாது. அதற்கு மாறாக இந்த உலகத்தில் அவன் ஒரு பயணியைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு பயணியும் அந்நிய மண்ணில் தன்னுடைய மனத்தைத் தொலைப்பதில்லை. அந்நிய நிலத்தில் அவன் பயணித்துக்கொண்டிருக்கின்ற அந்த வேளையிலும் அவனுடைய மனம் அவனுடைய பிறந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
முற்றிலும் இதைப் போன்றே ஒவ்வொரு மனிதரும் மறுமையின் இல்லத்தில் தம்முடைய மனத்தைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். மறுமைதான் தம்முடைய நிலையான வசிப்பிடமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை முழுக்க முழுக்க அந்நிய நிலமாக நினைக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் அதற்கும் ஒரு படிமேலாக எந்த ஊரிலும் நிலையாக வாழாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிகின்ற, எல்லா நாள்களிலும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற நாடோடியைப் போன்றே இந்த உலகில் வாழ முற்பட வேண்டும்.
இந்த மனநிலையுடன் மனிதன் வாழத் தொடங்கினால் அவனை அவனுடைய உண்மையான நோக்கத்திலிருந்து இந்த உலகத்தால் திசை திருப்பவே இயலாது. மோகம், பேராசை போன்றவற்றாலும் அவனை நேர்வழியிலிருந்து விலக்க முடியாது.

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.
*******************************************************************************
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணியினர் படித்தாலே பற்றியெரிகின்ற அளவுக்கு சுடுசொற்களைக் கொண்டு சுவரொட்டி ஒன்றை ஒட்டியிருக்கின்றார்கள்.
இது கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய, அருவருப்பான, கேவலமான செயல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
இந்து முன்னணியினரைப் பற்றியோ அவர்களின் திட்டங்களைப் பற்றியோ தமிழகத்தில் காலூன்றுகின்ற நோக்கத்துடன் அவர்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகச் செய்கின்ற முயற்சிகள் பற்றியோ நான் இங்கு பேச வரவில்லை.
என்னுடைய கவலையெல்லாம் இதனை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள விதத்தைப் பற்றித்தான். இதனைப் பகிர்ந்து கொண்டும் இதனைக் கண்டித்தும் பதிவிட்டும் பின்னூட்டமிட்டும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்ற முஸ்லிம்களின் வார்த்தைகளில்தான் எத்துணை வன்மம்..! எத்துணை வெறுப்பு!
‘அயோக்கிய நாய்களா!’,‘தைரியம் இல்லாத பொட்டைகளா’, ‘காவி வேசிகளா’‘தே.... பயலுகளா’, ‘காவி நாய்களா’, ‘நேருக்கு நேர் மோத திராணியற்ற பன்றிகள்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.
இதே போன்ற வசைகள்தாம் தோழர் ஆளூர் ஷாநவாஸின் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்களின் வாசகங்களிலும் சில நாள்களுக்கு முன்னால் கண்களில் பட்டது.
முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது. கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
சோகமானது: அண்ணல் நபிகளாரின் அழகிய நடைமுறைகளை அறிந்திராதவர்களாய் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் சோகமானது.
வேடிக்கையானது: அந்தச் சுவரொட்டியை ஈரோட்டின் ஏதோவொரு குறுக்குச் சந்தில் எங்கோ ஒரு மூலையில்தான் ‘அவர்கள்’ ஒட்டியிருக்கின்றார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் அதனை முகநூலில் பதிவிட்டு, பகிர்ந்து, தாம்தூமென்று குதித்து, ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து எல்லோரையும் அந்தச் சுவரொட்டியையும் அதில் இருக்கின்ற வாசகங்களையும் பார்க்கச் செய்து விட்டார்கள். இது எத்துணை அபத்தமான செயல் என்கிற உணர்வும் இவர்களுக்கு இல்லாமல் போயிற்றே.
முட்டாள்தனமானது: இந்து முன்னணியிலும் பரிவார் அமைப்புகளிலும் இருக்கின்ற, சார்ந்து இருக்கின்ற அனைவருமே முஸ்லிம் எதிர்ப்பிலும் ஊறிப்போனவர்கள் அல்லர். உலக இலாபங்களுக்காகவே அந்தக் கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் பொத்தாம் பொதுவாக அவர்களை நோக்கி முஸ்லிம்கள் அள்ளி வீசுகின்ற வசைகளும் சுடுசொற்களும் அவர்களை அந்தக் கூடாரத்திலேயே நிலையாகத் தங்க வைத்துவிடும். இவ்வாறாக முஸ்லிம்களின் இந்தக் கண்மூடித்தனமான எதிர்வினை முஸ்லிம்களுக்கே கேடாக அமையும். இதனை விட முட்டாள்தனமான செயல் வேறு ஒன்றைச் சொல்ல முடியுமா?

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

உறவு

உறவென்பது ஒரு அரிய உணர்வு
இதனை பலப்படுத்துதல் கடினம்
வெட்டிவிடுவது மிக எளிது
யாமறியோம் அதனின் பயனை
நிச்சயம் தேவைப்படும் சில வேளைகளில்
எதிர்பார்ப்பு இல்லாதது எதிர்பாரும் வேலையினில்
கிடைக்காது போனால் பாதிப்பு யாருக்கு
தோழா சிந்திப்பீர் செயல்படுவீர்
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்திடு வாழவிடு
வாழையடி வாழை தொடர்ந்திடட்டும் நற்கிரியைகள்.
இறைவா அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அருள் புரிவாயாக
- ஷேக் முஹம்மத் 

கல்யாண பொண்ணு பெயர் - நகைச்சுவை

கல்யாணப் பொண்ணு
பேர் என்ன?
பேஸ்புக்!
என்னாது அப்படி ஒரு பேரா!
அப்பத்தான் மாப்பிள்ளை பையன்
பொண்ணை கைக்குள்ள வச்சி
பார்த்துக்குவான்!
நன்றி : சகோதரர்  Mohamed Rafiudeen

வெள்ளை காகிதம் கவிதை - பழனி பாரதி

சூரியனுக்குக் கீழ்
ஒரு வெள்ளைக் காகிதத்தை
விரித்து வைத்திருக்கிறேன்
கொல்லப்பட்ட ஒரு மரத்தின் ஆவி 
கடந்துபோவதைப் போல
காற்றில் அது
தானாகப் படபடக்கிறது
அதில்
ஒரு கழுகின் நிழல் விழுகிறது
கூடிழந்த பறவைகளின் எச்சம் தெறிக்கிறது
இந்த வெள்ளைத் தாளில்
சுதந்திரமாக
காதல் கடிதம் எழுதிக்கொள்ள
ஒரு பெண்ணிடம் தரலாம்
காதலின் பொருட்டு
அவள் முகத்தில்
திராவகம் வீசப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
ஒரு விவசாய நிலத்தின்
பச்சை நிறத்தைத் தீட்டலாம்
அதன் கீழ்
புதைக்கப்பட விருக்கும்
மீத்தேன் வாயுக் குழாய்கள் வெடித்தால்
நான் என்ன செய்ய முடியும்?
இராமேஸ்வரத்தின் கடலில்
இந்தக் காகிதத்தால்
ஒரு படகு செய்து அனுப்பலாம்
இலங்கை இராணுவத்தால்
கொல்லப்படும் மீனவரோடு
இது கரையொதுங்கினால்
நான் என்ன செய்ய முடியும்?
நம் அரசியல்வாதிகளின்
அசல் சொத்துக்கணக்குகளை
இதில் அச்சடிக்கலாம்
இறையாண்மைக்கு எதிராக
கைது செய்யப்பட்டால்
நான் என்ன செய்ய முடியும்?
சூரியனுக்குக் கீழ்
இந்த வெள்ளைத் தாளை
வைத்துக்கொண்டு
நான் என்னதான் செய்ய முடியும்?
- பழநிபாரதி
'இனிய உதயம்' ஜனவரி 2015

டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....


டி எம் கிருஷ்ணாவின் கவனத்திற்கு....
*****************************************************
புகழ்பெற்ற மேடை பாடகர் டி எம் கிருஷ்ணா இன்றைய தி இந்து நாளிதழில் பிரெஞ்சு கார்ட்டூனிஸ்ட்களின் படுகொலைகளின் பின்னணியில் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கின்றார்.
அதில் உலகெங்கும் நடக்கின்ற பயங்கரவாதச் செயல்களை முஸ்லிம் தலைவர்கள் கண்டிப்பதில்லையே ஏன்? என்று அதிகமாக வருத்தப்பட்டிருக்கின்றார். அவருடைய இந்தக் கவலையும் அக்கறையும் பெரிதும் மதிக்கப்பட வேண்டியவையாகும். இந்திய முஸ்லிம்கள் பற்றிய ஒரு தவறான புரிதல் ஊடகம் மூலமாக உருவாக்கப்பட்டு அது எந்த அளவுக்குப் பேருருவம் எடுத்திருக்கின்றது என்பதற்கு டி எம் கிருஷ்ணா அவர்களின் ஆதங்கமே சான்று.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் இது போன்ற தவறான புரிதலுக்கு ஆளாகியிருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.
முதலாவதாக ஊடகம். முஸ்லிம்களை வில்லன்களாகச் சித்திரிப்பதில் திரைப்படங்கள் முதல் செய்தித்தாள்கள் வரை, தொலைக்காட்சி விவாதங்கள் முதல் இணைய அரட்டைகள் வரை முழு மூச்சுடன் இயங்கி வருகின்றன.
ஒரே ஒரு லேட்டஸ்ட் எடுத்துக்காட்டு, சில நாள்களுக்கு முன்னால் நடந்த பெங்களுர் குண்டுவெடிப்பு தொடர்பான செய்தியை ஊடகங்கள் கையாண்ட விதத்தைச் சொல்லலாம். குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று ஒரு ட்விட்டர் செய்தி வருகின்றது. முஸ்லிம் தீவிரவாதி மிரட்டல் என்று ஊடகங்கள் அலறின.
அடுத்த நாளே அது முஸ்லிம் பெயரில் தொடங்கப்பட்ட ட்விட்டர் கணக்கில் மிரட்டலை வெளியிட்டது முஸ்லிம் அல்ல, ஒரு இந்து பொறியியல் மாணவர் என்கிற உண்மை வெளிப்படுகின்றது. இதனை ஊடகங்கள் எப்படி செய்தி வெளியிட்டன, நினைவிருக்கின்றதா? மன நிலை பாதிக்கப்பட்ட இந்து விடுத்த மிரட்டல் என்றே ஊடகங்கள் அடக்கி வாசித்தன.
இரண்டாவதாக, இஸ்லாத்தின் பெயரால் இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் நிகழ்த்தப்பட்டு வருகின்ற கொடூரங்களுக்கும் கொடுமைகளுக்கும் வரம்பு மீறல்களுக்கும் கொலைகளுக்கும் இஸ்லாத்துடனும் முஸ்லிம்களுடனும் எந்தத் தொடர்பும் இல்லை என்றே உலகெங்கும் இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் முஸ்லிம் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் பொதுவான முஸ்லிம்களும் திரும்பத் திரும்பச் சொல்லி வந்துள்ளார்கள். ஆனால் முஸ்லிம் தலைவர்களின் இந்தக் கண்டனங்களும் அறிக்கைகளும் விளக்கங்களும் ஊடகத்தில் வெளியிடப்படுவதே இல்லை.
ஊடகங்கள் இருட்டடிப்பு செய்தாலும் உண்மை மறைந்து போய்விடுமா, என்ன? முஸ்லிம்கள் எந்த அளவுக்கு அமைதியை விரும்புகின்றார்கள், எந்த அளவுக்கு பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரானவர்கள் என்பதை அரசு அதிகாரிகள் பலரும் நேரடியாக உணர்ந்திருக்கின்றார்கள்.
இதற்கு எடுத்துக்காட்டாக ஒன்றை மட்டும் சொல்வேன். இப்போது நம் நாட்டின் பிரதம பாதுகாப்பு ஆலோசகராக இருக்கின்ற அஜித் டோவல் அவர்களின் கூற்று. அவர் சொல்கின்றார்: ’மதவாதக் கோணத்தில் பயங்கரவாதப் பிரச்னையை அணுகுவதை நாம் கைவிட வேண்டும். எந்தவொரு இந்து அமைப்பைக் காட்டிலும் முஸ்லிம்கள்தாம் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நமக்குத் துணை நிற்கின்றார்கள். பயங்கரவாதத்திற்கு எதிராக கண்டனத்தையோ தீர்ப்பையோ வெளியிட்ட ஒரே ஒரு இந்து அமைப்பை எனக்குச் சுட்டிக்காட்டுங்களேன்.’
இந்த வீடியோ இணைப்பை இங்கு இணைத்துள்ளேன். சரியாக 54:40 நேரத்தில் அவருடைய இந்த வாசகங்களைக் கேளுங்கள்.
ஆனால் இந்தப் புரிதலும் தெளிவும் பொதுவான நாட்டு குடிமக்கள் வரைக் கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் வேதனை.
மூன்றாவதாக, அரசியல் நோக்கங்களுக்காக முஸ்லிம் நாடுகளும் இளைஞர்களும் பகடைக் காய்களாய் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். பல்வேறு நாடுகளின் உளவுத் துறைகள் கூலிப்படையினரை வைத்துக்கொண்டு இந்தப் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றன. இந்த உளவுத்துறையினருக்குக் வரையறை இல்லாத பணமும் சுதந்திரமும் தரப்படுகின்றன. இவர்களின் செயல்பாடுகள் எந்தத் தணிக்கைக்கும் உட்படுத்தப்படுவதில்லை. அரசியல் தலைவர்களைக் கொல்வது முதல் பயங்கரவாத ஏஜென்ட்களை உருவாக்குவது வரை இவை முனைப்புடன் செயலாற்றி வருகின்றன. ஒரே ஒரு எடுத்துக்காட்டாக இன்று உலகம் முழுவதும் மிகப் பெரும் பயங்கரவாதி எனப் பேர் பெற்றிருக்கின்ற உஸாமா பின் லாதீனைச் சொல்லலாம். இந்த உஸாமாவுக்குப் பணமும் பயிற்சியும் நெட்வர்க்கும் வசதியும் களமும் செய்து கொடுத்தது சிஐஏ என்கிற உளவுத்துறைதான். ஆக இந்த உளவுத் துறை ஏஜென்சிகள் ஏதேனும் ஒரு வகையில் கட்டுப்படுத்தப்படாத வரை இந்த அவலங்கள் தொடரும் என்பதுதான் உண்மை.
டி எம் கிருஷ்ணா போன்றவர்கள் பிரச்னையின் இந்த மூன்று பரிமாணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான்.
நன்றி : சகோதரர்  டி, அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்
டி எம் கிருஷ்ணாவின் கட்டுரை இணைப்பு
http://tamil.thehindu.com/…/%E0%AE%87%E…/article6766998.ece…
பிரதம பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவலின் கூற்று காணொளி இணைப்பு.: (சரியாக 54:40 நேரத்தில் பார்க்க.)

மறுமை நாள் எதற்காக?

மறுமை நாள் எதற்காக?
************************************
‘மறுமை நாள் நம்மீது வராமலிருக்கின்றதே! என்ன விஷயம்?’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கின்றார்கள்.
கூறுங்கள்: ‘மறைவானவற்றை அறியக்கூடிய இறைவன் மீது ஆணையாக! அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. அணுவைவிடச் சிறியதோ, அதைவிடப் பெரியதோ அனைத்துமே ஒரு தெளிவான ஏட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.’
மேலும் இந்த மறுமை வருவது- நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிந்துகொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவதற்காகத்தான்! அவர்களுக்கு மன்னிப்பும் கண்ணியமான நற்பேறும் இருக்கின்றன.
எவர்கள் நம்முடைய வசனங்களைத் தோல்வியுறச் செய்திடக் கடுமையாக முயற்சி செய்தார்களோ அவர்களுக்கு துன்புறுத்தக்கூடிய மிக மோசமான வேதனை இருக்கின்றது.
(நபியே!) உம் இறைவனிடமிருந்து உம்மீது இறக்கியருளப்பட்டிருப்பது எதுவோ அது முற்றிலும் உண்மையானதென்றும், அதுவே, ஆற்றல் மிக்கவனும் மாபெரும் புகழுக்குரியவனுமான இறைவனின் பாதையைக் காண்பிக்கின்றது என்றும் ஞானமுடையவர்கள் நன்கறிகின்றார்கள்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 34 ஸபஃ 3-6

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

சிறந்த பழக்கவழக்கம் - இஸ்லாத்தின் பார்வை / நபி (ஸல்) வழிமுறைகள்



குழந்தைக்கு உடல் நலமில்லை என்றால், தாயுள்ளம் எப்படித் தவிக்கும் என்பதை நாம் அறிவோம்.
குழந்தை மீண்டும் உடல் நலம் பெறும் வரை அதன் அருகிலேயே அமர்ந்து கண்களில் நீர் மல்க, இதயம் உருக இறைவனை நினைத்து அந்தத் தாய் செய்யும் பிரார்த்தனைகளும் வேண்டுதல்களும்… அப்பப்பா! அதனால்தான் தாயன்புக்கு ஈடாகத் தரணியில் ஏதும் இல்லை என்று தாய்ப்பாசம் போற்றப்படுகிறது.
“ஒரு தாய் குழந்தை மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறாளோ, அதைவிட எழுபது மடங்கு அதிகமாக இறைவன் தன் படைப்பினங்கள் மீது பாசம் வைத்துள்ளான்” என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நோயாளிகளைச் சென்று நலம் விசாரிப்பது, இஸ்லாத்தில் பெரிதும் வலியுறுத்தப்பட்ட பண்பாடு ஆகும்.
“ஒரு முஸ்லிமுக்கு, இன்னொரு முஸ்லிம் மீது ஆறு கடமைகள் இருக்கின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள், “இறைத்தூதர் அவர்களே, என்ன அந்த ஆறு கடமைகள்?” என்று வினவினார்கள். அதற்கு இறைத்தூதர் கூறினார்:
1. நீங்கள் முஸ்லிம் சகோதரரைச் சந்தித்தால், அவருக்கு ஸலாம் கூறுங்கள்.
2. உங்கள் சகோதரர் ஒருவர் விருந்திற்கு அழைத்தால், அதை ஏற்றுக் கொள்ளுங்கள்.
3. உங்களிடம் ஒருவர் ஆலோசனை கேட்டால், அவருக்கு நலம் ஏற்படும் வகையில் நல்ல ஆலோசனை வழங்குங்கள்.
4. ஒருவர் தும்மிவிட்டு ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) என்று கூறினால், அதற்குப் பதிலாக, ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உனக்கு அருள்புரிவானாக) என்று கூறுங்கள்.
5. ஒருவர் நோய்வாய்ப்பட்டால், அவரை நலம் விசாரிக்கச் செல்லுங்கள்.
6. ஒருவர் இறந்து விட்டால், அவருடைய ஜனாஸா – இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளுங்கள்.
நோயாளியை நலம் விசாரிக்கச் செல்லும்போது அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அண்ணலார் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.
நோயாளியின் தலைக்கு அருகில் அமர்ந்து, அவருடைய தலையையும், உடலையும் தடவிக் கொடுத்து அன்பான ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும். ‘நோய்த் துன்பத்தைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு, இறைவன் மகத்தான நற்கூலியை வழங்குவான்’ எனும் உண்மையை அவர்களுக்கு இதமாக உணர்த்த வேண்டும்.
ஜைத் இப்னு அர்கம் எனும் நபித்தோழர் கூறுகிறார். “ஒரு முறை கண் வலியால் நான் பாதிக்கப்பட்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிப்பதற்காக வந்தார். என்னைப் பார்த்து, “ஜைதே, உங்களுடைய கண்ணில் இவ்வளவு வலி இருக்கிறதே, என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு நான், “வேதனையைத் தாங்கிக் கொள்கிறேன். பொறுமையை மேற்கொள்கிறேன்” என்று பதில் அளித்தேன். உடனே அண்ணல் நபி, “இந்த வலியைத் தாங்கிக்கொண்டு நீங்கள் பொறுமையாக இருப்பதால் அல்லாஹ் உங்களுக்கு சுவனத்தை அளிக்கிறான்” என்று கூறினார்கள்.
அதுமட்டுமல்ல, வலி அல்லது நோய்த்துன்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் தமது வலக்கையை வைத்துப் பின்வருமாறு பிரார்த்திப்பார்கள்.
“இறைவா ! இந்த வலியைப் போக்குவாயாக. மனிதர்களுடைய அதிபதியே ! இவருக்கு உடல்நலத்தை வழங்குவாயாக. நீயே நலம் வழங்குபவனாக இருக்கிறாய்.
உன்னைத் தவிர வேறு எவரும் நலம் அளிப்பார்கள் எனும் நம்பிக்கை இல்லை. இவருக்கு நோயின் அறிகுறியே இல்லாது போகும் வகையில் நலம் அருள்வாயாக !”
நோயாளியை நலம் விசாரிப்பதாகச் சொல்லிக் கொண்டு ‘வளவள’ வென பேசிக் கொண்டிருப்பதையோ, அவருடைய ஓய்வுக்கும், அமைதிக்கும் இடையூறு ஏற்படுத்துவதையோ அண்ணலார் தடுத்துள்ளார்கள்.
“நோயாளியிடம் அதிக நேரம் அமராமல் இருப்பது, சத்தமும், கூச்சலும் போடாமல் இருப்பது நபி வழியாகும்” என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) எனும் நபித்தோழர் கூறுகிறார்.
முஸ்லிம் அல்லாத ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தால், அவரையும் சென்று சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் உயர் பண்பாடாகும்.
யூதச் சிறுவன் ஒருவன் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் பணி புரிந்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன் நோய்வாய்ப்பட்டு விட்டான். ‘வேலைக்காரச்சிறுவன் தானே’ என்று அண்ணலார் அலட்சியப்படுத்தவில்லை. அந்த சிறுவனின் வீடு தேடிச் சென்று, அவனை நலம் விசாரித்து, அவனுடைய பெற்றோருக்கும் ஆறுதல் மொழி கூறிவிட்டு வந்தார்கள். இறைத்தூதரின் இந்த உயர்பண்பு கண்டு யூதக் குடும்பம் மனம் நெகிழ்ந்து போனது.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள், இறைவன் கூறியதாக ஒரு படிப்பினை ஊட்டும் நிகழ்வை நமக்கு அறிவித்துத் தந்துள்ளார்கள்.
“ஆதத்துடைய மகனே, நான் நோய்வாய்ப்பட்டிருந்தேன். ஆனால் நீ என்னை வந்து நலம் விசாரிக்கவில்லையே” என்று இறைவன் மறுமையில் கூறுவான்.
அப்போது அடியான், “இறைவா, நீயே அனைத்துப் படைப்பினங்களின் அதிபதி. உன்னை எப்படி நான் நலம் விசாரிக்க முடியும்” என்று கேட்பான்.
அதற்கு இறைவன், “நான் படைத்த இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்தான். நீ அங்கு சென்று அவனை நலம் விசாரித்திருந்தால், என்னை அங்கு கண்டிருப்பாய்” என்று கூறுவான்.
பார்த்தீர்களா…! ஒரு நோயாளியை நலம் விசாரித்தல் என்பது இறைவனையே நலம் விசாரிப்பது போலாகும் என்கிறது இஸ்லாம். என்னே உயர் பண்பாடு !
ஒரு முறை என் அலுவலக மேலாளர் நோய்வாய்ப்பட்டிருந்தார். நானும், உடன் பணியாற்றும் இன்னொரு நண்பரும் அவரை நலம் விசாரிப்பதற்காக மேலாளரின் வீட்டிற்குச் சென்றோம். உடன் வந்த நண்பர் மேலாளரை நலம் விசாரிப்பதற்குப் பதிலாக, வீட்டிலுள்ள பொருள்களை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டும், ‘இந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை எப்ப வாங்கினீங்க? நான் போன முறை வந்தபோது உங்கள் அறையில் ஏர்கண்டிஷன் இல்லையே, எப்போ ஏசி போட்டீங்க?’ என்றெல்லாம் தொணதொணக்கத் தொடங்கி விட்டார். இத்தகைய நடத்தையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) எனும் நபித்தோழர் நோய்வாய்ப்பட்டிருந்த ஒருவரை நலம் விசாரிக்கச் சென்றார். அப்போது தம்முடன் சிலரை அழைத்துச் சென்றார். அங்கு ஒரு பெண் இருந்தார். நபித்தோழருடன் வந்தவர்களில் ஒருவர் அந்தப் பெண்ணை உற்று நோக்குவதை அறிந்தபோது, “நீர் அவளைப் பார்ப்பதைவிட உன் கண்களைப் பிடுங்கிக் கொள்வது நல்லது” என்று எச்சரித்தார்.
நோயாளிக்கு ஆறுதல் கூறுவதுடன், அவர் வசதியற்றவராக இருந்தால், அவருடைய மருத்துவ சிகிச்சைக்கு நம்மால் முடிந்த உதவியைச் செய்வதும் நலம் விசாரித்தலில் அடங்கும். அவருடைய நோயின் காரணமாகக் குடும்பம் வறுமையில் இருக்குமேயானால், அவருடைய குடும்பத்தினருக்கும் உதவும்படி இஸ்லாம் அறிவுறுத்துகிறது. நோயாளிக்கு எல்லா வகையிலும் ஒத்தாசையாக இருக்க வேண்டும் என்பது இஸ்லாம் கற்றுத்தரும் இனிய பண்பாடாகும்.
நன்றி: சிராஜுல் ஹஸன்
நன்றி : நர்கிஸ் – டிசம்பர் 2014

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.


4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.


5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.


6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.


7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.


8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.


9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.


10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.......................


நன்றி : சகோதரர் மணி விவேகானந்தன் 

அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.

அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
********************************************************************
இவர்கள் எப்பொழுதேனும் பூமியில் சுற்றித்திரிந்து தங்களுக்கு முன் வாழ்ந்து சென்றவர்களின் முடிவு என்னவாயிற்று என்பதைப் பார்த்ததில்லையா?
அவர்கள் இவர்களைவிட அதிக வலிமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள்; பூமியை நன்கு பண்படுத்தினார்கள்; மேலும், இவர்களைக் காட்டிலும் அதிகமாக அவர்கள் அதில் வளமான வாழ்க்கையை நிர்மாணித்தார்கள்.
அவர்களிடம் அவர்களுடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார்கள். பிறகு, அல்லாஹ் அவர்களுக்கு அக்கிரமம் புரிபவனாக இருந்ததில்லை. ஆனால், தமக்குத் தாமே அவர்கள் அக்கிரமம் புரிந்துகொண்டிருந்தார்கள்.
இறுதியில் எவர்கள் தீவினைகள் செய்து வந்தார்களோ அவர்களுடைய இறுதி முடிவு மிகவும் தீயதாகிவிட்டது. ஏனெனில், அவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களைப் பொய்யென்று கூறி அவற்றைப் பரிகாசம் செய்துகொண்டுமிருந்தார்கள்.
அல்லாஹ்தான் படைப்புகளை முதன் முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக்கொண்டு வரப்படுவீர்கள்.
திருக்குர்ஆன் அத்தியாயம் 30 அர்ரூம் 9-11

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ்