Friday, January 9, 2015

ஐடி நிறுவனங்கள் - வேலைவாய்ப்பு தற்போதைய சூழல் - சகோதரர் விநாயக முருகன்

ஐடி நிறுவனங்களின் ஆட்குறைப்பு விஷயத்தில் நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பதை பார்க்க முடிகிறது. ஐடி நண்பர்கள் பலரின் ஆலோசனைகளை பேஸ்புக், டிவிட்டர் பதிவுகளில் தொடர்ந்து பார்க்கமுடிகிறது. நான் சந்திக்கும் பெரும்பாலான நண்பர்களிடம் இந்த ஐடி தொழில் இல்லாவிட்டால் என்ன செய்வீங்க என்று கேட்டால் ஒருக்கணம் திகைத்து நிற்பதை பார்த்துள்ளேன். பெரும்பாலும் கல்லூரி கேம்பஸ் நேர்முகத் தேர்வில் தேறி மென்பொருள் நிறுவனத்துக்கு வேலைக்கு வருபவர்கள் முதல் மாதம் சுளையாக இருபதாயிரம், முப்பதாயிரம் என்று வரும்போது என்ன செய்வதென்று தெரியாமல் சாம்சங் கேலக்ஸியும், டெர்பி, லீ ஜீன்சுகளுமாய் வாங்கி குவிப்பார்கள். நடுத்தர வயதினர் இஎம்ஐக்களில் கார்,வீடு வாங்கி சம்பளத்தில் முக்கால்வாசியை கடன் கட்டிக் கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் கடன் வாங்காமல் வீடு,கார் வாங்க முடியாது என்பது நிதர்சனம் என்றாலும் என்னைக்கேட்டால் சம்பளத்தில் இருபது சதவீதத்துக்கு குறைவாக கடன் வாங்கினால் நல்லது என்பேன். எந்த தொழில் செய்தாலும் பதினெட்டு மாதங்கள் சம்பளத்தை கையில் சேமிப்பாக வைத்திருக்கவும் என்று வாரன் பபெட் சொல்வார்..
சைக்கிளில் சென்று பேப்பர் விநியோகம் செய்தது, ஊரில் அம்மா நடத்திய இட்லிக்கடையில் வேலை, பிறகு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலை, பத்திரிக்கையில் உதவி ஆசிரியர், மார்கெட்டிங் ரெப், பத்திரிக்கையில் ப்ரீலான்சர் என்று பல வேலைகளை செய்தபிறகே ஐடி நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றவன் நான். ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும்போது இரண்டாயிரம், மூவாயிரம் ரூபாய் சம்பளத்துடன் புதிய வேலை வரும்.மூவாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும்போது அந்த வேலை பிடிக்காமல் திடீரென ஒரு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து ஆயிரம் ரூபாய்க்கு வேலை பார்ப்பேன். நான்கைந்து ஐடி நிறுவனங்கள் மாறி அலைந்துவிட்டேன். இப்போது இருக்கும் வேலை பறிபோய் ஒரு பத்திரிக்கை வேலையோ அல்லது வேறு ஒரு தொழிலோ செய்யும் பட்சத்தில் நான் கெளரவம் பார்க்காமல் அதை செய்வேன். எனது தேவைகள் மிக குறைவு. சிக்கல்கள் அதிகம் இல்லாமல் மிக எளிமையாக வாழ பழகிவிட்டேன். பெரியளவில் கடன் இல்லை. பெரியளவில் சேமிப்பும் இல்லை. ஒரு குழந்தையோடு போதுமென்று நிறுத்திவிட்டேன். எனது உணவுபழக்கமும் மிக எளிமையானவை. இந்த விஷயத்தில் மலையாளிகளை எனக்கு பிடிக்கும். எந்த சூழலிலும் வாழ பழகியவர்களை வாழ்க்கை அப்படியொன்றும் பெரிதாக தண்டித்து விடாது என்று உறுதியாக நம்புவன். சிக்கனத்தை, சேமிப்பை, எளிமையை கொண்டாடியவர்கள் தமிழர்கள். ஆனால் இன்று அப்படி இல்லை. தவிர வேலை இழப்பு என்பது வருத்தமான விஷயம் என்றாலும் வாழ்க்கை அதனுடன் முடிந்துவிடுவதில்லையே. ஆடம்பரம் மேற்கத்திய வாழ்க்கையிடமிருந்து நாம் கற்றது. போலிக்கெளரவம் நமது ரத்தத்திலேயே ஊறியது. இந்த இரண்டுமே நவீன வாழ்க்கையின் சிக்கல்கள்.

நன்றி : சகோதரர் விநாயக முருகன்

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

வரிய கவிஞன் குபேரன் ஆனார் வார்த்தைகளில்......

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று

உயிருள்ள மனிதற்கு அருளபடாத ஒன்று உயிரற்ற தொலை தொடர்பு மற்றும் மின்னணு சாதனங்களுக்கு - (Restore Factory settings ) மீட்டெடுக்க தொழிற்சாலை அமைப்பு.

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்

ஒரு பயணியைப் போன்று வாழுங்கள்
********************************************
அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அறிவிக்கின்றார்:
அண்ணல் நபிகளார்(ஸல்) என்னுடைய தோளைப் பிடித்துக்கொண்டு சொன்னார்: ‘இந்த உலகத்தில் ஒரு பயணியைப் போன்று அல்லது வழிப்போக்கரைப் போன்று வாழுங்கள்’
நூல் :புகாரி
ஆம். இந்த உலகத்தில் மனிதனின் உண்மையான அந்தஸ்து ஒரு பயணியைப் போன்றதுதான். ஏதோ இங்கேயே காலமெல்லாம் வாழப்போகின்றோம் என்கிற நினைப்புடன் அவன் இந்த உலகத்தில் வாழக்கூடாது. அதற்கு மாறாக இந்த உலகத்தில் அவன் ஒரு பயணியைப் போன்றே நடந்துகொள்ள வேண்டும்.
எந்தவொரு பயணியும் அந்நிய மண்ணில் தன்னுடைய மனத்தைத் தொலைப்பதில்லை. அந்நிய நிலத்தில் அவன் பயணித்துக்கொண்டிருக்கின்ற அந்த வேளையிலும் அவனுடைய மனம் அவனுடைய பிறந்த மண்ணையே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்கும்.
முற்றிலும் இதைப் போன்றே ஒவ்வொரு மனிதரும் மறுமையின் இல்லத்தில் தம்முடைய மனத்தைப் பிணைத்துக்கொள்ள வேண்டும். மறுமைதான் தம்முடைய நிலையான வசிப்பிடமாக இருக்கின்றது என்பதை உணர வேண்டும். இந்த உலகத்தை முழுக்க முழுக்க அந்நிய நிலமாக நினைக்க வேண்டும்.
இன்னும் சொல்லப்போனால் அதற்கும் ஒரு படிமேலாக எந்த ஊரிலும் நிலையாக வாழாமல் ஊர் ஊராகச் சுற்றித் திரிகின்ற, எல்லா நாள்களிலும் பயணித்துக்கொண்டே இருக்கின்ற நாடோடியைப் போன்றே இந்த உலகில் வாழ முற்பட வேண்டும்.
இந்த மனநிலையுடன் மனிதன் வாழத் தொடங்கினால் அவனை அவனுடைய உண்மையான நோக்கத்திலிருந்து இந்த உலகத்தால் திசை திருப்பவே இயலாது. மோகம், பேராசை போன்றவற்றாலும் அவனை நேர்வழியிலிருந்து விலக்க முடியாது.

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.

முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது.
*******************************************************************************
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னணியினர் படித்தாலே பற்றியெரிகின்ற அளவுக்கு சுடுசொற்களைக் கொண்டு சுவரொட்டி ஒன்றை ஒட்டியிருக்கின்றார்கள்.
இது கண்டிக்கப்பட வேண்டிய, தண்டிக்கப்பட வேண்டிய, அருவருப்பான, கேவலமான செயல்தான் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இல்லை.
இந்து முன்னணியினரைப் பற்றியோ அவர்களின் திட்டங்களைப் பற்றியோ தமிழகத்தில் காலூன்றுகின்ற நோக்கத்துடன் அவர்கள் இந்து வாக்கு வங்கியை உருவாக்குவதற்காகச் செய்கின்ற முயற்சிகள் பற்றியோ நான் இங்கு பேச வரவில்லை.
என்னுடைய கவலையெல்லாம் இதனை முஸ்லிம்கள் எதிர் கொண்டுள்ள விதத்தைப் பற்றித்தான். இதனைப் பகிர்ந்து கொண்டும் இதனைக் கண்டித்தும் பதிவிட்டும் பின்னூட்டமிட்டும் தங்களின் கண்டனங்களை வெளிப்படுத்தியிருக்கின்ற முஸ்லிம்களின் வார்த்தைகளில்தான் எத்துணை வன்மம்..! எத்துணை வெறுப்பு!
‘அயோக்கிய நாய்களா!’,‘தைரியம் இல்லாத பொட்டைகளா’, ‘காவி வேசிகளா’‘தே.... பயலுகளா’, ‘காவி நாய்களா’, ‘நேருக்கு நேர் மோத திராணியற்ற பன்றிகள்’ என்றெல்லாம் சகட்டுமேனிக்குத் திட்டித் தீர்த்திருக்கின்றார்கள்.
இதே போன்ற வசைகள்தாம் தோழர் ஆளூர் ஷாநவாஸின் பதிவுக்குப் பின்னூட்டம் இட்டவர்களின் வாசகங்களிலும் சில நாள்களுக்கு முன்னால் கண்களில் பட்டது.
முஸ்லிம் சகோதரர்களின் இந்த எதிர்வினை சோகமானது. வேடிக்கையானது. முட்டாள்தனமானது. கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும்.
சோகமானது: அண்ணல் நபிகளாரின் அழகிய நடைமுறைகளை அறிந்திராதவர்களாய் இந்த முஸ்லிம் சகோதரர்கள் இருக்கின்றார்கள் என்பதுதான் சோகமானது.
வேடிக்கையானது: அந்தச் சுவரொட்டியை ஈரோட்டின் ஏதோவொரு குறுக்குச் சந்தில் எங்கோ ஒரு மூலையில்தான் ‘அவர்கள்’ ஒட்டியிருக்கின்றார்கள். ஆனால் நம்முடைய சகோதரர்கள் அதனை முகநூலில் பதிவிட்டு, பகிர்ந்து, தாம்தூமென்று குதித்து, ஆர்ப்பரித்து ஆரவாரம் செய்து எல்லோரையும் அந்தச் சுவரொட்டியையும் அதில் இருக்கின்ற வாசகங்களையும் பார்க்கச் செய்து விட்டார்கள். இது எத்துணை அபத்தமான செயல் என்கிற உணர்வும் இவர்களுக்கு இல்லாமல் போயிற்றே.
முட்டாள்தனமானது: இந்து முன்னணியிலும் பரிவார் அமைப்புகளிலும் இருக்கின்ற, சார்ந்து இருக்கின்ற அனைவருமே முஸ்லிம் எதிர்ப்பிலும் ஊறிப்போனவர்கள் அல்லர். உலக இலாபங்களுக்காகவே அந்தக் கூடாரத்தில் ஒதுங்கியிருக்கின்றார்கள். இந்த நிலையில் பொத்தாம் பொதுவாக அவர்களை நோக்கி முஸ்லிம்கள் அள்ளி வீசுகின்ற வசைகளும் சுடுசொற்களும் அவர்களை அந்தக் கூடாரத்திலேயே நிலையாகத் தங்க வைத்துவிடும். இவ்வாறாக முஸ்லிம்களின் இந்தக் கண்மூடித்தனமான எதிர்வினை முஸ்லிம்களுக்கே கேடாக அமையும். இதனை விட முட்டாள்தனமான செயல் வேறு ஒன்றைச் சொல்ல முடியுமா?

நன்றி : சகோதரர் அஜீஸ் லுத்புல்லாஹ் 

உறவு

உறவென்பது ஒரு அரிய உணர்வு
இதனை பலப்படுத்துதல் கடினம்
வெட்டிவிடுவது மிக எளிது
யாமறியோம் அதனின் பயனை
நிச்சயம் தேவைப்படும் சில வேளைகளில்
எதிர்பார்ப்பு இல்லாதது எதிர்பாரும் வேலையினில்
கிடைக்காது போனால் பாதிப்பு யாருக்கு
தோழா சிந்திப்பீர் செயல்படுவீர்
வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்திடு வாழவிடு
வாழையடி வாழை தொடர்ந்திடட்டும் நற்கிரியைகள்.
இறைவா அருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பதை உணர்ந்து கொள்ள அருள் புரிவாயாக
- ஷேக் முஹம்மத் 

கல்யாண பொண்ணு பெயர் - நகைச்சுவை

கல்யாணப் பொண்ணு
பேர் என்ன?
பேஸ்புக்!
என்னாது அப்படி ஒரு பேரா!
அப்பத்தான் மாப்பிள்ளை பையன்
பொண்ணை கைக்குள்ள வச்சி
பார்த்துக்குவான்!
நன்றி : சகோதரர்  Mohamed Rafiudeen